குவைத்தின் அடுத்த அமீராக ஷேக் நவாப் நியமனம்..!!

Sheikh Nawaf Al Ahmed Al Sabah appointed Emir
Sheikh Nawaf Al Ahmed Al Sabah appointed Emir. (Photo : IIK)

ஷேக் நவாப் அல் அகமது அல் சபா குவைத்தின் அடுத்த அமீரக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் நவாஃப் (83) தற்காலிகமாக அமீரின் அரசியலமைப்பு கடமைகளில் சிலவற்றை ஜூலை 18 அன்று, மருத்துவ பரிசோதனைகளுக்காக அமீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படத்திலிருந்து கவனித்து வந்தார்.

குவைத் சட்டத்தின் கீழ், அமீர் இல்லாத நிலையில், மகுட இளவரசர் செயல் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார், ஷேக் நவாப் 2006 ஆம் ஆண்டில் மகுட இளவரசராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் 40 நாட்களுக்கு அதிகாரப்பூர்வமாக துக்கத்தையும், இன்று முதல் 3 நாட்களுக்கு அதிகாரப்பூர்வ துறைகள் அனைத்தும் மூடப்படுவதாகவும் குவைத் அறிவித்துள்ளது.

தேசிய சட்டமன்ற சபாநாயகர் மர்சுக் அல் கானிம் கூறுகையில்,

தேசிய சட்டமன்றம் புதன்கிழமை காலை 11 மணிக்கு (ஐக்கிய அரபு எமிரேட் நேரம்) ஒரு சிறப்பு அமர்வை நடத்துகிறது.

இதன் போது குவைத் அரசியலமைப்பின் 60 வது பிரிவின்படி ஷேக் நவாஃப் அரசியலமைப்பு உறுதிமொழி எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

ஷேக் நவாஃப் முன்பு பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1990 ஈராக் படையெடுப்பிற்குப் பிறகு, ஷேக் நவாப் 1992 வரை அவர் வகித்த தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

1994 மற்றும் 2003 க்கு இடையில், ஷேக் நவாஃப் தேசிய காவலரின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பொதுவான அச்சுறுத்தல்களுக்கு எதிராக படைகளில் சேருவதை நோக்கமாகக் கொண்டு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC)

உள்துறை அமைச்சர்களின் கூட்டங்களில் ஷேக் நவாஃப் முக்கிய பங்கு வகித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​ஷேக் நவாஃப் உலகின் மிக வயதான மகுட இளவரசர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook

Twitter