குவைத்தில் 16வது தேசிய சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு..!!

Kuwait National Assembly Elections
Photo credit : Times Kuwait

குவைத்தில் 16-வது தேசிய சட்டமன்ற (National assembly) தேர்தலுக்கான தேதியை அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் 16-வது தேசிய சட்டமன்ற தேர்தலை டிசம்பர் 5,2020 சனிக்கிழமை அன்று நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

குவைத் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முசாரம் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி அமர்வு இன்று (அக்டோபர் 20) செவ்வாய்க்கிழமை கூட்டப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

இந்த கூட்டத்தில் புதிய அமீர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தை குவைத்தின் பிரதம மந்திரி ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபா அவர்கள் தலைமை தாங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter