பாலஸ்தீனத்தின் பிரச்சனைக்கு தீர்வுகாண குவைத் மற்றும் மொராக்கோ அழைப்பு..!!

Kuwait, Morocco call for just solution in Palestine. (Image credit : Anduloa agency)

US ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை அடுத்து சர்வதேச சட்டத்தின்படி பாலஸ்தீனத்தில் நியாயமான தீர்வு காண குவைத் மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு புதன்கிழமை அன்று அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இந்த US-ன் முயற்சிகளை ஒப்புக் கொண்டாலும், தீர்வு பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மொராக்கோவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய பிரச்சினைக்கு ஒரு நியாயமான மற்றும் விரிவான தீர்வை சர்வதேச சமூகம் வகுத்துள்ள சர்வதேச சட்டபூர்வமான தீர்மானங்கள் மற்றும் குறிப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதன் மூலம் மட்டுமே தீர்வுகாண முடியும் என்று குவைத் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில், டிரம்ப் செவ்வாயன்று தனது “நூற்றாண்டின் ஒப்பந்தம்” என்று அழைக்கப்படுவதை வெள்ளை மாளிகையில் வைத்து வெளியிட்டார், இதை பாலஸ்தீனியர்கள் முற்றுலுமாக நிராகரித்து கண்டனம் தெரிவித்தது. மேலும், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.