சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்களுடன் இராணுவ விமானம் குவைத் வந்தடைந்தது..!!

Kuwait military plane arrives from china loaded with medical equipment. (photo : Mubasher)

கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சீனாவிலிருந்து தேவையான மருத்துவ உபகரணங்களை குவைத் விமானப்படை விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (மே 3) அறிவித்துள்ளது.

Kuwait military plane arrives from china loaded with medical equipment. (photo : Arab Times)

மக்கள் தொடர்பு இயக்குநரகம் ஒரு செய்திக்குறிப்பில், மருத்துவ உபகரணங்கள் பாதுகாப்பு, சுகாதார அமைச்சகம் மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான குவைத் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக வந்தடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

விமானப்படை மற்றும் அமைச்சகத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் (Air bridge) விமானங்கள் மூலம் இத்தகைய உபகரணங்கள் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.