ஹாங்காங் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு செல்லவேண்டாம் என்று குவைத் எச்சரிக்கை..!!

Kuwait issues travel warning for Hong Kong, Macau amid coronavirus outbreak. (image source :The Times)

குவைத் சனிக்கிழமையன்று ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அந்நாட்டுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் பலநபர்களை கொன்றுகுவித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவியதற்கு பதிலளிக்கும் வகையில் ஹாங்காங்கின் அரசாங்கம் மிக உயர்ந்த அவசரகால நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹாங்காங் மற்றும் மக்காவ் நகரங்களில் உள்ள அனைத்து ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளையும் மூடப்பட்டுள்ளது.

அவசர உதவி தேவைப்பட்டால் ஹாங்காங்கில் உள்ள குவைத்தின் பொதுத் தூதரகத்தின் 0085298211669 என்ற அவசர ஹாட்லைனை அழைக்குமாறு கேட்டுக்கொண்டது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்த கொரோனா வைரஸால் 830 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா உறுதிப்படுத்தியது. மேலும், அதே நேரத்தில் இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக அதன் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் கடந்த ஆண்டு மத்திய சீன நகரமான வுஹானில் தோன்றியது. பிறகு இது அமெரிக்கா, தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் பரவியது குறிப்பிடத்தக்கது.

NEWS : ArabTimes.