கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த குவைத் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு..!!

Kuwait imposes partial curfew nationwide to curb coronavirus.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்க ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதுமான ஊரடங்கு உத்தரவை குவைத் விதித்துள்ளதாக மாநில செய்தி நிறுவனமான KUNA தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 10,000 தினார் ($ 32,157) வரை அபராதம் விதிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்காததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று துணை பிரதமர் அனஸ் அல்-சலேஹ் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் இடைநீக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க குவைத் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தற்போது குவைத்தில் மொத்தமாக 176 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

source : National post