குவைத்தில் இரண்டு இடங்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு..!!

Kuwait imposes full time curfew for two places.

குவைத் அரசாங்கம் திங்கள்கிழமை (06.04.2020) மாலை 5:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பகுதிநேர ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. மேலும், Mahboula மற்றும் Jleeb Al-Shuyoukh பகுதிகளுக்கு முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பகுதிநேர ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது இன்று (07.04.2020) முதல் நடைமுறைக்கு வரும் என்று துணை பிரதமரும் அமைச்சரவை விவகார அமைச்சருமான Anas Al-Saleh அவர்கள் தெரிவித்துள்ளார்.

பகுதிநேர ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் கூட பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Mahboula மற்றும் Jleeb Al-Shuyoukh பகுதிகள் மீது இரண்டு வாரங்களுக்கு முழுமையான ஊரடங்கை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் Al-Saleh தெரிவித்தார்.

தங்கள் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு பொறுப்பான அர்ப்பணிப்பைக் காட்டிய குடிமக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் Al-Saleh நன்றி தெரிவித்துள்ளார்.