குவைத் அமைச்சரவை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்; மே 30 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு..!!

Total Lockdown in kuwait from 10th may to 30th may. (photo : KuwaitLocal)

குவைத்தின் உள்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான அனஸ்-அல்-சலேஹ் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், ஈத் பண்டிகை முடிந்த பின்னர் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்றும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு அதிகாரிகள், தேசிய பாதுகாப்புப் படை மற்றும் இராணுவத்துடன் இந்த முழு ஊரடங்கு காலத்தில் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சுகாதாரத்துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் மே 10 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் மே 30 வரை நாட்டில் முழு ஊரடங்கை விதிக்க அமைச்சர்கள் சபை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தொடர்ந்து பேசிய அவர் இந்த முழு ஊரடங்கு உத்தரவிலிருந்து அத்தியாவசிய விலக்கப்பட்ட துறைகள் பின்வருமாறு : சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், மின்சாரம், எண்ணெய், நகராட்சி போன்ற முக்கிய சேவைத் துறை மற்றும் இந்த ஊரடங்கு காலத்தில் முக்கிய நடவடிக்கைகளுக்கு சேவை செய்யும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பபட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், 6 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு நபருக்கும் பார்கோடு மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு நியமனங்கள் நியமிப்பதற்கான ஒரு முறையை நாங்கள் தொடங்கினோம் மற்றும் முன்னுரிமை ஒதுக்கீடு அடிப்படையில் அல்லது ஏஜென்சிகள் மூலம் எரிவாயு சிலிண்டர்களை மக்களுக்கு தடையின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மே மாதத்தின் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி பெற்ற ஒருவர் மட்டுமே பல்பொருள் அங்காடியில் நுழைய அனுமதிக்கப்படுவார் என்று குவைத் உள் விவகாரத்துறை அமைச்சர் மரியம் அல்-அகில் தெரிவித்தார்.

ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்ச நேரத்தில் வங்கிகளின் முக்கிய கிளைகள் செயல்பட அனுமதிக்கப்படும் மற்றும் ஏர்-கண்டிஷனிங் பராமரிப்பு நிறுவனங்களுக்கு மக்களுக்கு சேவை செய்ய ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கார்களைப் பயன்படுத்தாமல் மாலை 4:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை குடியிருப்பு பகுதிகளில் நடைபயிற்சி செய்ய அனுமதி அளிக்கபட்டுள்ளது.