குவைத்தில் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி…!!

Photo Credit : IIK

குவைத்தில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவுடன் 14 நாட்கள் வீட்டு தனிமைபடுத்தலில் இருக்க வேண்டும்.

இந்நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் நாட்டை விட்டு வெளியேற விருப்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

மேலும், அவர்கள் விரும்பினால் மீண்டும் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கலாம் என்று அரபு நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், பயணம் செய்ய விரும்பும் நபரின் பயணத்தை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் தடுக்கமாட்டார்கள் என்று அல் கபாஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

ஒவ்வொரு பயணிகளும் முகக்கவசங்களை அணிய வேண்டும் மற்றும் கையுறைகள் போன்றவற்றை அணிவதை அதிகாரிகள் பரிசோதனை செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட 34 நாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று வட்டாரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter