குவைத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருக்கு ரசிகர் மன்றம் திறப்பு..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசன் இறுதியாக சுந்தர்.சி இயக்கத்தில் “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபுவின் “மாநாடு” படத்தில் பல சிக்கல்களைத் தாண்டி வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியிலிருந்து ஹைதெராபாத் நகரத்திலுள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் இவரது ரசிகர்கள் குவைத் நாட்டில் ரசிகர் மன்றம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த நிகழ்வால் மிக்க மகிழ்ச்சியடைந்த சிம்பு மிகவும் உருக்கமான தன்னுடைய நன்றியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது அவரின் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் “தன்னுடைய குடும்பம் நன்றாக இருக்கவேண்டுமென்று அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு குவைத் நாட்டில் வாழும் உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. அப்படிப்பட்ட நீங்கள் எனக்காக ரசிகர் மன்றம் தொடங்கியது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

Source : UN