குவைத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க ஓப்புதல்..!!

Kuwait facemask Fines
Cabinet set to impose fines for failing to wear masks. (Photo Credit : TimesKuwait)

குவைத்தில் கொரோனா நோய்த்தொற்றை தவிர்க்க முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முகக்கவசம் அணிவது தொடர்பான சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 50 முதல் 100 தினார் வரை அபராதம் விதிக்க அமைச்சரவை “ஃபத்வா மற்றும் சட்டம்” என்ற வரைவு சட்டத்தை சமர்ப்பித்துள்ளது என்று அல் ராய் தினசரி செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

மேலும், இந்த அபராதத் தொகை கொரோனா வைரஸ் அவசரநிலைக்கான உச்சக்குழு மதிப்பீட்டின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மால்கள், வணிக வளாகங்கள், கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் சுகாதார கிளப் போன்றவற்றில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

பொது மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றத் தவறியதால் அபராதத் தொகை போன்ற புதிய நடவடிக்கையை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அதிகாரிகள் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றுமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter