ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஆசிரியர்களுக்கு குவைத்திற்குள் நுழைய அனுமதி..!!

Kuwait Expats Teachers
Photo Credit : Social Media

குவைத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 34 நாடுகளுக்கு பயணத் தடையை குவைத் விதித்துள்ளது.

இதன் காரணமாக, வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இதனை தொடர்ந்து, குவைத்திற்கு அவர்களை திருப்பி அனுப்ப குவைத் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்று உள்ளூர் செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் கல்வி அமைச்சகத்தின் ஆசிரியர்களின் குடியிருப்பை புதுப்பிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.

குறிப்பாக, நாட்டில் தேவைப்படும் முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம், அரபு மற்றும் ஆங்கில மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குடியிருப்பை புதுப்பிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

இதனை தொடர்ந்து, ஆசிரியர்கள் தங்கள் பெயர்களை வெளிநாடுகளில் உள்ள குவைத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களின் குடியிருப்பை புதுப்பிக்க அடுத்த வாரம் உள்துறை அமைச்சகத்திற்கு பெயர்கள் அனுப்பப்படும் என்று வட்டாரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter