குவைத் தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள நாடுகளுடன் விமான சேவையை துவங்க உள்ளதாக வந்த செய்திகள் வதந்தி…!!

Kuwait denies rumours
Kuwait denies rumours it is resuming flights with countries on banned list. (Photo : AFP)

குவைத்தின் நேரடி விமான சேவையை தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள நாடுகளுடன் மீண்டும் துவங்க முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுவதை குவைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குவைத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தடைசெய்யப்பட்ட 34 நாடுகளுடன் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் நேரடி விமான சேவையை நிறுத்திவைத்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இதனை தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட நாடுகளுடன் குவைத் தனது நேரடி விமானங்களை துவங்குவதாக வந்த வதந்தியில் எந்த உண்மையும் இல்லை என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும், விமான சேவை தடைசெய்துள்ள 34 நாடுகளின் பட்டியல் அப்படியே உள்ளது என்றும் குறிப்பிடப்பட்ட நாடுகளில் எதுவும் தற்போது சேர்க்கப்படவில்லை என்றும் டெய்லி செய்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

தடைக்கு உட்பட்ட நாடுகள் பின்வருமாறு:

இந்தியா, ஈரான், சீனா, பிரேசில், கொலம்பியா, ஆர்மீனியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், சிரியா, ஸ்பெயின், சிங்கப்பூர், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, இலங்கை, நேபாளம், ஈராக், மெக்சிகோ, இந்தோனேசியா, சிலி , பாகிஸ்தான், எகிப்து, லெபனான், ஹாங்காங், இத்தாலி, வடக்கு மாசிடோனியா, மால்டோவா, பனாமா, பெரு, செர்பியா, மாண்டினீக்ரோ, ஆப்கானிஸ்தான், டொமினிகன் குடியரசு மற்றும் கொசோவ் ஆகிய நாடுகளாகும்.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter