முழு ஊரடங்கில் உள்ள Al-Mahboula பகுதி தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய குவைத்..!!

kuwait delivers 1500 food baskets to worker in al-mahboula.

குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி (KRCS) மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் (COVID-19) காரணமாக முழு ஊரடங்கில் உள்ள Al-Mahboula பகுதியில் உள்ள தொழிலாளர்கள் 1,500 பேருக்கு உணவுப் பொருட்கள் உள்ளடக்கிய கூடைகளை வெள்ளிக்கிழமை (17.04.2020) வழங்கியுள்ளது.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து Mahboula மற்றும் Jleeb AL-Shuyoukh ஆகிய இடங்களில் உணவுப்பொருட்களை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக KRCS-ன் மக்கள் தொடர்புத் தலைவர் Khaled AI-Zayed அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jahra மற்றும் Taima பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் தேவைப்படும் குடும்பங்களுக்கு தேவையானவற்றை வழங்குவதில் KRCS ஆர்வமாக உள்ளது அவர் தெரிவித்தார்.

மேலும், மேற்கூறிய பகுதிகளில் KRCS 400 உணவு கூடைகளை வழங்கியுள்ளதாக அல்-சயீத் அவர்கள் தெரிவித்தார்.