குவைத்தில் COVID-19 இரண்டாம் அலை (Second wave) பற்றி MOH எச்சரிக்கை..!!

Kuwait Second wave Covid19
Kuwait Warned about second wave of covid19. (Photo Credit : Kira_Yan, Shutterstock)

குவைத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து சுகாதாரத் விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உலக முழுவதும் சாத்தியமான COVID-19 இரண்டாவது அலையைப் (Second wave) பற்றி பேசுகிறது அதனால் அனைத்து சுகாதாரத் தேவைகளையும் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று தாரிக் அல் மெஸ்ரெம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

மேலும், கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மற்றும் 48 மணி நேரத்திற்குள் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த வாரம் கொரோனா நோயாளிகளுக்கான வார்டுகளின் ஆக்கிரமிப்பு 8 சதவீதமாகவும்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளில் 11 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான டாக்டர்.அப்துல்லா அல் சனத் அவர்கள் அறிவித்துள்ளார்.

குவைத்தில் கடந்த மாதம் சராசரியாக 13 சதவீதமாக இருந்த நிலையில் (அக்டோபர் 11) ஞாயிற்றுக்கிழமை அன்று சோதனைகளின் எண்ணிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் சதவீதம் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter