கொரோனா வைரஸ்; குவைத்தில் உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் மேலும் அதிகரிப்பு..!

Kuwait confirms 43 cases of coronavirus, all coming from Iran
Kuwait confirms 43 cases of coronavirus, all coming from Iran (Image Credit: AFP)

குவைத்தில் 43 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ளது, இது வியாழக்கிழமை காலை நடைபெற்ற குவைத் சுகாதார அமைச்சக கூட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட அந்த நபர்கள் அனைவரும் பிப்ரவரி மாதத்தில் ஈரானுக்குச் சென்றவர்கள் என்று அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், பாதிக்கப்பட்ட அனைவருமே சீராக இருப்பதாகவும், மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து நோயாளிகளும் தேவையான மருத்துவ சேவைகளைப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த நபர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

கூடுதலாக அவர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் Gulf news தெரிவித்துள்ளது.