குவைத் ஏவியேஷன் ஷோ-2020 வெற்றிகரமாக நிறைவுபெற்றது…!

Kuwait Aviation Show 2020 ‘huge success’ with over 60,000 visitors. (image source : Kuwait Times)

குவைத் ஏவியேஷன் ஷோ சுமார் 60,000 பார்வையாளர்களுடன் 18-ஆம் தேதி ஜனவரி,2020 அன்று வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

அவ்விழாவில் குவைத் விமான கண்காட்சியின் மூன்றாவது பதிப்பு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறும் என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்தது.

இவ்விழாவின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் இஸ்மாயில் பெஹ்பெஹானி அவர்கள் விமானச்சந்தையில் குவைத் ஒரு முக்கிய போட்டியாளராக உருவெடுத்துள்ளதை இந்த விழாவின் வெற்றி காட்டுகிறது என்று மகிழிச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், இந்த முக்கியமான நிகழ்விற்கு HH.அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களின் ஆதரவு பொது சிவில் மற்றும் இராணுவ விமானத் தொழில்துறையின் வளர்ச்சியின் மீது அவருக்கு உள்ள மிகுந்த ஆர்வத்தை குறிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி பாராட்டினார்.

இவ்விழாவில் பங்குபெற்ற குவைத் விமானப்படை, சவுதி ஹாக்ஸ் அணி, எமிராட்டி காவலரி அணி, இத்தாலிய விமானப்படை, அமெரிக்கா விமானப்படை, பிரிட்டிஷ் விமானப்படை மற்றும் கத்தார் skydive அணி என அணைத்து அணிகளும் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர், இவ்ரகளது அனைவரின் முயற்சிகளையும் பாராட்டுவதாக பெஹ்பெஹானி தெரிவித்தார்.

இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் பங்கேற்றது குவைத் சர்வதேச அளவில் பெற்ற நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மேலும், இது போக்குவரத்து, சுற்றுலா, தொலைத்தொடர்பு மற்றும் பிற துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை புதுப்பிக்க உதவுவதோடு தேசிய பொருளாதாரத்திற்கும் உதவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

விமான நிறுவனங்களை ஈர்க்கும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் நாடுகளின் சர்வதேச நிகழ்ச்சி அரங்கில் குவைத்தை வைப்பதே குவைத் ஏவியேஷன் ஷோவின் முக்கிய குறிக்கோளாகும் என்று பெஹ்பெஹானி இறுதியாக தெரிவித்தார்.

NEWS Source : Kuwait Times