குவைத் அமீரின் இறுதி சடங்கில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை..!!

Funeral restricted only for families.
Amir Funeral restricted only for families. (Photo : IIK)

குவைத்தில் மறைந்த அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் உடல் அமெரிக்காவிலிருந்து இன்று (செப்டம்பர் 30) புதன்கிழமை குவைத் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீர் ஷேக் சபா அவர்கள் அமெரிக்காவில் நேற்று (செப்டம்பர் 29) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு காலமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார முன்னெச்சரிக்கை காரணமாக அமீர் ஷேக் சபா அவர்கள் இறுதித் சடங்கில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமிரி திவான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

மேலும், தற்போதுள்ள சுகாதார பிரச்சினை சூழ்நிலையை கருத்தில்க் கொண்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தேசிய சட்டமன்ற சபாநாயகர் மர்சுக் அல் கானிம் கூறியதாவது, தேசிய சட்டமன்றம் புதன்கிழமை காலை 11 மணிக்கு (ஐக்கிய அரபு எமிரேட் நேரம்) ஒரு சிறப்பு அமர்வை நடத்துகிறது, இதன் போது குவைத் அரசியலமைப்பின் 60 வது பிரிவின்படி ஷேக் நவாஃப் அரசியலமைப்பு உறுதிமொழி எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

இந்திய அரசு சார்பில் குடியரசுத் தலைவர்,இந்திய பிரதமர் ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், குவைத் இந்திய தூதரகம் சார்பிலும் மன்னர் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இதுபோல் வளைகுடா நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பலரும் அமீர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter