குவைத் அமீர் நாட்டு மக்களுக்கு ரமலான் சிறப்பு உரை..!!

Kuwait Amir delivered his yearly speech of Ramadan.

குவைத அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபிர் அல்-சபா அவர்கள் சனிக்கிழமை (மே 9) நிகழ்த்திய உரையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்ப்பதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு குவைத் மக்கள் ஆதரவளிப்பது மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.

நாட்டின் சுகாதார அதிகாரிகள் வகுத்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும், அதாவது வரவிருக்கும் முழு ஊரடங்கு உத்தரவின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு வலியுறுத்தினார்.

வைரஸை தடுப்பதற்கு வெற்றிகரமான சிகிச்சை மருந்தை கண்டுபிடிப்பதில் முயற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போதைய சவாலை எதிர்கொள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்பு வெற்றிகரமாக நடைமுறைகளை அமைத்திருந்தது, வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து நபர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அமீர் ஷேக் சபா அவர்கள் தன்னுடைய உரையில் தெரிவித்தார்.

குவைத் குடிமக்களை வெற்றிகரமாக வெளிநாடுகளிலிருந்து அழைத்து வந்த அரசாங்க அதிகாரிகளின் முயற்சிகளை அமீர் அவர்கள் பாராட்டினார்.

மேலும், பிரதம மந்திரி ஷேக் சபா கலீத் அல்-முபாரக் அல்-சபாவும் மற்றும் மூத்த அதிகாரிகள் கொரோனவை எதிர்கொள்வதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர் எனவும், தற்போதைய சங்கடத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை சிந்திக்குமாறு மக்களை அமீர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்த தொற்றுநோயானது எண்ணெய் விலைகள் மற்றும் முதலீடுகள் குறைதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்றும், வளங்களை புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டார்.

தற்போதைய சங்கடத்தை சமாளிக்கவும், பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிக்க தற்போதைய ஆசீர்வதிக்கப்பட்ட மாதமான ரமழானின் மீதமுள்ள நாட்கள் அமையட்டும் என்று அமீர் அவர்கள் வாழ்த்தினார்.