இந்தியாவின் குவைத் தூதர், இந்தியா மற்றும் குவைத்திற்கு இடையேயான வரலாற்று உறவுகள் குறித்து கருத்துரைத்துள்ளார்..!!

Kuwait Amb. to India commends historic ties between kuwait, India.

இந்தியாவின் குவைத் தூதர் Jassem Al-Najem அவர்கள் குவைத் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உறவைப் பாராட்டினார்.

மேலும், இரு நாடுகளும் எப்போதும் அரசியல் மற்றும் பொருளாதார களங்களில் அவற்றை உருவாக்க முற்படுவதாகவும் தெரிவித்தார்.

COVID-19 என்ற கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை முடுக்கிவிட குவைத்தும் இந்தியாவும் ஒத்துழைத்து ஒருங்கிணைந்து வருவதாக Al-Najem அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

குவைத் மற்றும் இந்தியா ஆகியவை தங்கள் வெளியுறவுக் கொள்கைகளில் அதாவது, ஐ.நா. சாசனத்தை மதித்தல், பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடாதது மற்றும் நாடுகளின் இறையாண்மையை மதித்தல் போன்ற பல கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

குவைத் மற்றும் இந்தியா, இந்த ஆண்டு முதல் காலாண்டில் கூட்டுக் குழு கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸால் கூட்டத்தை ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.