குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் வணிக (commercial) விமானங்கள் தொடக்கம்..!!

Kuwait Airport to resume commercial flights Saturday. (image credit : IIK)

COVID-19 தொற்றுநோய் காரணமாக ஐந்து மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர், குவைத் சர்வதேச விமான நிலையம் நாளை ஆகஸ்ட் 1 சனிக்கிழமை முதல் வணிக விமானங்களை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக (commercial) விமானங்களை மூன்று கட்டங்களாக மீண்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டம் :

முதல் கட்டம் வரும் ஆகஸ்ட் 1 முதல் தொடங்குகிறது, தினசரியாக 8,000 முதல் 10,000 பயணிகள் வரை அனுமதிக்கப்படும், அதாவது ஒரு நாளைக்கு சுமார் 120 முதல் 130 விமானங்கள் வரை அனைத்து டெர்மினல்களிலிருந்தும் இயக்கப்படும் என்றும், இதில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளுக்கு இடையே நெரிசல் வராமல் இருக்க, ஒவ்வொரு விமானத்திற்கும் இடைவெளி நேரம் ஒரு மணி நேரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டம் :

இரண்டாவது கட்டம் பிப்ரவரி 1, 2021ஆம் தேதி தொடங்கி ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும், தினசரியாக ஒரு நாளைக்கு 20,000 பயணிகள் வரை அனுமதிக்கப்படும், அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 விமானங்கள் வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டம் :

மூன்றாவது கட்டம் ஆகஸ்ட் 1, 2021ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், தினசரியாக ஒரு நாளைக்கு 30,000க்கும் அதிகமான பயணிகளையும், அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் 300 விமானங்களையும் சென்றடைய அரசு இலக்கு கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms