குவைத்தில் முழு ஊரடங்கில் உள்ள Jleeb Al-Shuyoukh பகுதியில் KRCS உணவுப் பொருட்கள் விநியோகம்..!!

KRCS doles out 1,000 food parcels to laborers in Jleeb Al-shuyoukh. (photo : Arab Times)

குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி (KRCS) கொரோனா வைரஸ் பரவலின் காரணத்தால் முழு ஊரடங்கில் உள்ள Jleeb Al-Shuyoukh பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உணவுப் பொருட்கள் உள்ளடக்கிய 1,000 பெட்டிகளையும் மற்றும் 250 பெட்டி கோழிக்கறியும் விநியோகித்துள்ளது.

KRCS doles out 1,000 food parcels to laborers in Jleeb Al-shuyoukh. (photo : Arab Times)

ஒவ்வொரு பெட்டிகளிலும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு உணவளிக்க போதுமான அடிப்படை உணவுப்பொருட்கள் உள்ளன என்று KRCS-ன் இயக்குநர் ஜெனரல் Abdulrahman Al-Oun அவர்கள் குவைத் செய்தி நிறுவனத்திடம் (KUNA) தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிப்பதிலும், ஊரடங்கு மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதிலும் KRCS ஆர்வமாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான Jleeb Al-Shuyoukh மற்றும் Al-Mahboula பகுதிகளில் வர்த்தகர்கள் மற்றும் பயணத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க KRCS உள்துறை அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.