குவைத் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலைச் செய்யும் இந்தியருக்கு கொரோனா பாதிப்பு..!!

KNPC: An Indian worker working on Mina Al-Ahmadi Refinery infected with coronavirus.

குவைத் அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளி ஒருவருக்கு கொரோனா வைரஸ் (COVID-19) பாதிப்பு கண்டறியப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை KNPC வெளியிட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்ட நபர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மினா-அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைந்த ஒரு திட்டத்தின் கீழ் அவர் பணிபுரிகிறார் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள கூடுதல் அறிக்கையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றார் எனவும், அங்கு மருத்துவப் பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது நிரூபிக்கப்பட்டது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக வைரஸால் பாதிக்கப்பட்ட தொழிலாளியுடனான தொடர்புடைய நபர்களை அடையாளம் காண்பது மற்றும் கூடுதல் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகள் நிறைவடையும் வரை திட்டத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுகாதார அமைச்சகம் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை துவங்கியுள்ளது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.