குவைத்தில் மேலும் இரண்டு பகுதிகள் முழு ஊரடங்கிலிருந்து நீக்கம்..!!

Jleeb and Mahboulla to be free from isolation tomorrow. (photo : IIK)

குவைத்தில் சுமார் 3 மாத முழு ஊரடங்கிற்கு பிறகு, நாளை (ஜூலை 09) அதிகாலை ஜிலீப் மற்றும் மஹ்பவ்லா பகுதிகளை ஊரடங்கிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமைச்சரவை முடிவின்படி, வியாழக்கிழமை அதிகாலை முதல் மஹ்பவ்லா மற்றும் ஜிலீப் பகுதிகளைச் சுற்றியுள்ள வேலியை அகற்ற உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஏப்ரல் 6 முதல் ஜிலீப் மற்றும் மஹ்பவ்லா ஆகிய பகுதிகள் ஊரடங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் ஏராளமான வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை ஃபர்வானியாவில் ஊரடங்கு தொடர்ந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08