பொது மன்னிப்பு கோருவோரை ஏற்றிக்கொண்டு ஜசீரா ஏர்வேஸ் இன்று (மே 21) இந்தியாவுக்கு புறப்பட்டது..!!

Jazeera airways carrying Indian amnesty seekers left to India today. (photo : IIK)

குவைத்திலிருந்து பொது மன்னிப்பு கோருவோரை இந்தியாவிற்கு ஏற்றிச் சென்ற முதல் விமானம் இன்று (மே 21) 145 பயணிகளுடன் குவைத்திலிருந்து ஆந்திராவின் விஜயவாடாவுக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல வாரங்களாக குவைத் அரசாங்க முகாம்களில் தங்கவைத்த 145 பெண்கள், இன்று ஜசீரா ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் குவைத் அரசு அறிவித்த பொது மன்னிப்பு திட்டத்தில் சுமார் 7000 இந்தியர்கள் பயனடைந்துள்ளனர், அவர்கள் அனைவரையும் குவைத் அரசாங்க நிதியுதவி முகாம்களில் உணவுடன் தங்க வைத்து குவைத் அரசாங்கத்தின் சொந்த செலவில் அவர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறது.

இருப்பினும், இந்தியாவில் தேவையான தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட தாமதம் அவர்கள் இந்தியாவுக்கான பயணத்தை தாமதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்பு கோருவோரை ஏற்றிச் செல்லும் இரண்டாவது விமானம் நாளை லக்னோவுக்கு பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.