கொரோனா வைரஸ்; குவைத்திற்கான அனைத்து விசாக்களும் இடைநிறுத்தம்..!!

Issuing of all visas to kuwait suspended. (photo : Arab Times)

வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் சுகாதார அமைச்சகங்களுடன் உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து அனைத்து விசா வழங்குவதையும் நிறுத்துமாறு அமைச்சரவை அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாக அரசு தொடர்பு மையத்தின் தலைவர், அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முஸாராம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நேற்று சீஃப் பேலஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், குவைத்திற்கு வரும் குவைத் மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என அனைவரும் சுகாதார அமைச்சகத்தினால் நிர்ணயிக்கப்படும் காலத்திற்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து திரையரங்குகளும், பொது மற்றும் தனியார் திருமண அரங்குகள் மற்றும் ஹோட்டல்கள் தற்காலிக காலத்திற்கு மூடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : Arab Times