Jleeb Al-Shuyoukh மற்றும் Al-Mahboula பகுதிகளை முழு ஊரடங்கில் வைத்தது குவைத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றியது..!!

Isolation of jleeb and Mahboula saved kuwait from a disaster. (photo : Kuwait local)

சுகாதார அமைச்சகத்தின் துணைச் செயலாளர் Dr. Buthaina Al-Mudhaf அவர்கள் கூறுகையில், குவைத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் இருப்பதற்கு காரணம், தங்கும் விடுதி மற்றும் வேலை செய்யும் இடங்களில் தொழிலாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததன் விளைவாகும் என்று தெரிவித்தார்.

குவைத்தில் கொரோனா வைரஸ் பரவுவதில் முக்கிய பகுதிகளாக Jleeb Al-Shuyoukh மற்றும் Al-Mahboula என்பது விசாரணைக்குப் பின்னர் மிகத் தெளிவாகத் தெரிந்தன, அங்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததன் விளைவாக பெரிய அளவில் தொற்று பரவியது.

மேலும், இது இறுதியில் அந்த இரண்டு பகுதிகளிலும் முழு ஊரடங்கை அமல்படுத்த வழிவகுத்தது என்று தெரிவித்தார்.

இந்த இடங்களில் கட்டுப்பாட்டை எளிதாக்குவது, வைரஸின் கட்டுப்பாட்டின் அளவைப் பொறுத்தது மற்றும் சுகாதார அமைச்சகத்தினால் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு அனைவரின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பொறுத்தது என்று Al-Mudhaf தெரிவித்துள்ளார்.

மேலும், குவைத்தில் தொற்றுநோயால் இறப்பு விகிதங்கள் உலகளவில் குறைவாகவே உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அவர் மக்களுக்கு வலியுறுத்தினார்.