கொரோனா வைரஸ்; குவைத் விமானநிலையத்தில் சோதனை..!!

iran passengers checked by kuwait airport due to corona virus.

ஈரானிலிருந்து குவைத் விமான நிலையம் வந்தடைந்த 130 பயணிகள் யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்று முதல்கட்ட பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைவரும் ஆரோக்கியமாக உள்ளனர் என்றும், கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, ஈரானில் கொரோனா வைரஸால் 5 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் 28 பேர் வரையில் நோய் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.