குவைத்திலிருந்து இந்தியர்களின் முதல்கட்ட மீட்பு நடவடிக்கையில் அவசரகால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை..!!

India's Vande Bharat evacuation plan from kuwait. (photo : The TribuneIndia)

குவைத்திலிருந்து தாயகம் திரும்புவதற்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குவைத் தூதரகத்தின் வலைதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

இதில் முன்னுரிமை அடிப்படையில் பட்டியலை அதிகாரிகள் தயாரித்து, அந்த பட்டியலில் இடம்பெறும் நபர்களை தூதரகதின் அதிகாரிகள் முதலில் தொடர்புகொண்டு தாயகம் பயணம் குறித்து கேட்டறிந்து நீங்கள் தாயகம் திரும்புவதற்கு தயார் என்று கூறும் பட்சத்தில் உங்களை தாயகம் திரும்புவதற்கு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுத்தல் செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, இறுதி பட்டியலில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் தூதரகம் அதிகாரிகள் வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுருந்தது.

இதையடுத்து, உங்களை விமான நிறுவனம் தொடர்பு கொள்ளும் எனவும் அதன் பிறகு, அனுமதி வழங்கியுள்ள இந்தியர்கள் மட்டும் விமான பயணச்சீட்டை குவைத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் பணம் செலுத்தி பெறவேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையில் மீட்பு நடவடிக்கையில் முதல்கட்டமாக அவசரகால அறுவைச் சிகிச்சை தொடர்பான அனுமதி பெற்றுள்ள நபர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோரின் பட்டியலை இந்திய தூதரகம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இன்று (மே 9) முதல் ஹைதராபாத் விமானம் காலை 11: 25 மணிக்கு குவைத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 :30 மணிக்கு ஹைதராபாத்தை சென்றடையும். இரண்டாவது கொச்சி விமானம் குவைத்திலிருந்து மதியம் 1: 45 மணிக்கு புறப்பட்டு இரவு 9 : 15 மணிக்கு கொச்சியை சென்றடையும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதற்காக இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய தூதரகத்தின் சார்பில் தயார் நிலையில் உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.