குவைத்தில் கொரோனா நோயாளிகளுக்கு கடமையுடன் பணியாற்றிய இந்திய செவிலியர் மாரடைப்பால் மரணம்..!!

Indian nurse died in kuwait due to heart attack.

குவைத்தின் Mubarak மருத்துவமனையில் கொரோனா வார்டில் அவசர சிகிச்சைப் பிரிவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு எந்த தயக்கமுமின்றி பணியாற்றிய இந்திய செவிலியர் ஒருவர் பணியிடத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் திடிரென மரணமடைந்தார் என்று துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

இவருடைய பெயர் ஜோசப் மேத்யூ (33) என்பது தெரியவந்துள்ளது, இவர் இந்தியாவைச் சேர்ந்த கேரளா மாநிலம் பத்தனம்திட்டா, மல்லப்பள்ளியை அடுத்த அனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

செவிலியரின் மரணம் உடன் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் தங்களால் இது நம்பமுடியவில்லை என்று கனத்த இதயத்துடன் தெரிவித்துள்ளனர்.