குவைத்தில் தமிழக இளைஞர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம்..!!

Indian Expat died in kuwait due to illness. (photo : Newsweek)

குவைத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த திருநெல்வேலி மாவட்டம் பனக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மோனிகராஜ் வேலு (28) , இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென்று ஏற்பட்ட சிறுநீரகம் தொடர்பான நோய் காரணமாக Adan மருத்துவமனையில் கடந்த 16ஆம் தேதி முதல் சிகிச்சையில் இருந்தார், மேலும், அவர் ஒரு சிறந்த கபடி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் குவைத்தில் உள்ள NBTC கம்பெனியில் வேலை செய்து வந்தார் மற்றும் இவருடைய தந்தை இசக்கி முத்து வேல் அதே நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், சம்மந்தப்பட்ட கம்பெனி நிர்வாகம் மோனிகராஜ் உடலை தாயகம் அனுப்பி வைப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.