குவைத்தில் இந்திய இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணம்..!!

Indian died in Kuwait due to heart attack.

குவைத்தில் இந்திய இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் எனவும், அவருடைய பெயர் பிரமோத் ஜேக்கப் (வயது-40) என்பது தெரியவந்துள்ளது.

இவர் கேரளா மாநிலம் கோட்டயம் காஞ்ஞனபள்ளியை அடுத்த யானைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமோத் நேற்று Abbasiya பகுதியில் உள்ள தன்னுடைய குடியிருப்பில் காலையில் திடிரென ஏற்பட்ட மாரடைப்பினால் மரணமடைந்தார் என்றும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத்தின் Shuwaikh பகுதியில் உள்ள ஒரு தனியார் Fabrication கம்பெனியில் விற்பனையாளராக வேலைசெய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

குவைத் சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு உடலை தாயகம் அனுப்பும் வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.