குவைத்தில் சிவில் ஐடியில் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு ஏற்ப கூட்டுறவு சங்கங்களுக்கு போகவேண்டும் என்ற முடிவு ரத்து..!!

ID no bar in visit to coop societies in kuwait. (photo : Arab Times)

குவைத்தில் சிவில் ஐடியில் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு ஏற்ப கூட்டுறவு சங்கங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முடிவை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

முன்னதாக, கூட்டுறவு அமைந்துள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் ஷாப்பிங் செய்ய அனுமதிக்கப்படும் என்று அமைச்சகம் ஒரு முடிவை வெளியிட்டது, மேலும் குடியிருப்பு பகுதியை வாடிக்கையாளர்களின் சிவில் ஐடிகளில் உள்ள முகவரி வைத்து பார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுருந்தது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் அமைச்சகம் இந்த முடிவை எடுத்தது மற்றும் கூடுதலாக, சுலைபியாவில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தையை மூடுவதாக அறிவித்த முடிவையும் அமைச்சகம் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சந்தை காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08