குவைத்தில் மனைவியை கொன்ற கணவன் கைது..!!

Indian Arrested For Forging Entry Pass
A husband arrested for killing his wife in kuwait.

குவைத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு தனது 30 வயது மகள் காணாமல் போனதாக அவரது தாயால் புகார் கொடுக்கப்பட்டு தேடிவந்த நிலையில் தற்போது சல்மி பாலைவனப் பகுதியில் புதைக்கப்பட்டு பைக்குள் இருந்தபடி அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தனது மகளை காணவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஃபிர்தஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட போது இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்து அவரின் சடலத்தை ஒரு பைக்குள் வைத்து சல்மி பாலைவனப் பகுதியில் புதைத்ததாக தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் மற்றும் நிதி மோசடியிலும் குற்றவாளி ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது, தற்போது குற்றவாளி பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுளார் என்பது குறிப்பிடத்தக்கது.

source : Arab Times