குவைத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் புதுப்பிக்கப்பட்ட தங்களது ஓட்டுநர் உரிமத்தை பெற்றுச்சென்றனர்..!!

Hundreds of people collected renewed driving license. (photo : IIK)

குவைத்தின் அல்-ஆர்டியா பகுதியில் உள்ள அல்-நாஸ்ர் கிளப்பில் கடுமையான பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றுச்சென்றனர்.

சமூக தொடர்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கான கடுமையான நடவடிக்கைகள் உள்துறை அமைச்சகத்தால் மற்றவர்களைத் தொடர்பு கொள்ளாமல் குறுகிய காலத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 11 முதல் ஜூன் 6 வரை தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தவர், அல்-ஆர்டியாவில் உள்ள அல்-நாஸ்ர் கிளப்பில் (இருப்பிட வரைபடம்) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை புதிய உரிமத்தைப் பெறலாம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.