கொரோனா வைரஸ் (COVID-19); சீனாவின் தற்போதைய நிலவரம் என்ன?

Coronavirus
China's Hubei province on Thursday (Feb 13) reported a sharp rise in confirmed coronavirus cases

சீனாவின் ஹூபே மாகாணத்தில் இன்றைய நிலவரப்படி (பிப்ரவரி 13), உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் சம்பவங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நோயறிதலுக்கான புதிய வழிமுறையை பின்பற்ற தொடங்கிய பின்னர் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, இறப்பு எண்ணிக்கை 242ஆக உயர்ந்துள்ளது, இது திங்களன்று பதிவான 103 மாகாண தினசரி இறப்பு எணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

அதே நேரத்தில் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை 14,840ஆக உயர்ந்துள்ளது, இதன் மூலம் மொத்தம் 48,206 பேர் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து, சீனாவில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1355 ஆக உயர்ந்துள்ளது.