புனித ரமலான் மாதத்தின் வருகைக்கு குவைத் அமீர் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வாழ்த்து ..!!

HH the amir congratulates the citizens and expats near advent of Ramadan.

குவைத்தின் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபிர் அல்-சபா அவர்கள் புனித ரமலான் மாதத்தின் வருகைக்காக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக அமீர் அவர்களின் திவான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதின் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த ஆண்டு ரம்ஜான் வாழ்த்துக்களை நேரடியாக அமீர் அவர்கள் பெற முடியாது என்று திவான் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் வசிக்கும் மக்களுக்கும் உலகத்தில் உள்ள அனைத்து அரபியர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கும் தனது வாழ்த்துக்களை குவைத் அமீர் அவர்கள் தெரிவித்துள்ளார்.