சென்னையில் இருந்து குவைத் செல்லும் குவைத் ஏர்லைன்ஸ் விமானம் திடீர் ரத்து..!

Flight cancelled for coronavirus panic
kuwait sends 170 indians from deportation.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, எனவே அதன் பீதி காரணமாக இன்று சென்னை வரும் 9 விமானங்கள், புறப்படும் 9 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னை வந்து மீண்டும் அடுத்த நாள் அதிகாலை 2.50 மணிக்கு சென்னையில் இருந்து குவைத் செல்லும் குவைத் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

குவைத்தில் இருந்து சென்னை வரும் 3 விமானங்கள்- கத்தார், தாய்லாந்து, ஷார்ஜா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கொரோனா வைரஸ் பீதி காரணமாக வெளிநாடுகளில் இருந்து சென்னை வருபவர்களும் சென்னையில் இருந்து வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் இல்லாத காரணத்தால் இந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

கொரோனா பீதி காரணமாக வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் படிப்படியாக ரத்து செய்யப்படுவது, விமான பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : Dinakaran