குவைத்தில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க இருக்கும் முக்கிய முடிவுகள்..!!

Farwaniya lockdown, moving to third stage, partial curfew to be decided in today’s cabinet meeting. (photo : IIK)

குவைத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான மூன்றாம் கட்டத்தில் ஃபர்வானியாவின் ஊரடங்கு நீக்குதல் மற்றும் நாடு முழுவதும் பகுதி ஊரடங்கு உத்தரவு நேரங்களின் மாற்றங்கள் ஆகியவை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இயல்புநிலைக்கு திரும்புவதற்கான மூன்றாம் கட்டம், ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் என்றும், ஒவ்வொரு கட்டமும் 21 நாட்களுக்கு நீடிக்கும் என்றும், இரண்டாவது கட்டம் ஜூன் 30 அன்று ஒரு வாரம் தாமதத்துடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்பான சுகாதார நிலைமைகள், இரண்டாம் கட்டத்திலிருந்து மூன்றாம் கட்டத்திற்கு சீராக மாறுவதற்கு சாதகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த பத்து நாட்களில், அதிக பாதிப்புக்குள்ளான குடியிருப்புப் பகுதியின் பட்டியலில் ஃபர்வானியா அறிவிக்கப்படவில்லை என்றும், இது ஃபர்வானியா பகுதியின் ஊரடங்கை நீக்குவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டத்தில், அனைத்து அரசு அலுவலகங்களும் 50% க்கும் அதிகமான ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கும் மற்றும் ஹோட்டல்களும் ரிசார்ட்டுகளும் மீண்டும் திறக்கப்படும், மேலும் டாக்ஸி சேவை ஒரு பயணத்திற்கு ஒரு பயணிகள் என்ற வரம்பில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter : https://twitter.com/kuwaittms?s=08

? Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

? Sharechat : https://www.sharechat.com/tamilmicsetkw/