குவைத்தில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியவர்க்கு சிறை..!!

Expat arrested for breaking curfew in kuwait.

கொரோனா வைரஸால் ஏற்பட்ட மரணங்களுக்கு 50 கல்லறைகளை தோண்டுவது குறித்து போலி செய்திகளை வெளியிட்டு பரப்பியதற்காக குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைக்க அரசு வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட செய்தி குடிமக்கள் மத்தியில் மிகுந்து பீதியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் 21 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர் குடிமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கில் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், குறிப்பாக இந்த மோசமான சூழ்நிலைகளின்போது வதந்திகள் பரப்புவோரை ஒருபோதும் அரசு பொறுத்துக்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : Arab Times