குவைத்தில் கொரோனா வைரஸ் குறித்து போலிசெய்திகள் வெளியிடுபவர்களுக்கு சிறை..!!

Fake news on Coronavirus, You could be imprisoned for 5 years. (image source : USF news)

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் குறித்து கடந்த இரண்டு நாட்களாக குவைத்தில் உள்ள சில சமூக ஊடக பக்கங்கள் போலி செய்திகளை பரப்பப்பட்டுவருகிறது.

மேலும், பல்வேறு சமூக ஊடக பக்கங்களில் குவைத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாகவும் மற்றும் சில நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. உண்மைகளின் அடிப்படையில், தவறான செய்திகளை பதிவிடும் இந்த நபர்களை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததை சட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

தவறான செய்திகளைப் பரப்பும் குற்றத்தில் குற்றவியல் நோக்கம் அடையப்படுகிறது என்று நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டின. மேலும், இந்த குற்றத்திற்கு சம்பவ அதிகாரி அவரது விசாரணைகளை நடத்த உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை என்று கூறியுள்ளது.

NEWS : Arab Times