குவைத்தில் விசா நீட்டிப்பு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது..!!

Expats can apply for 3 month extension request if residence is expired.

குவைத்தில் வசிப்பவர்கள் பல்வேறு காரணங்களால் விசா நீட்டிப்பு(புதுப்பிக்க) செய்ய முடியாத மக்களுக்கு குவைத் அரசு நீட்டிப்பு செய்ய வாய்ப்பு அளித்துள்ளது.

இதற்காக மூன்று தினார்கள் செலுத்தி உங்கள் விசாக்களை நீட்டிப்புக்கு மூன்று மாத காலத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இதை பயன்படுத்தலாம்.

தற்போது குவைத்தில் வசிப்பவர்கள் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க முடியாமல் தவிக்கும் நபர்கள் மூன்று மாதங்களுக்கு தங்கள் விசாவை ஆன்லைனில் புதுப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம்.

https://eres.moi.gov.kw/individual/en/auth/login

குவைத்தின் குடியிருப்பு விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் உதவி துணை செயலாளர் மேஜர் ஜெனரல் அன்வர்-அல் – பர்ஜாஸ் அவர்கள் அறிவிப்பை மேற்கோள் காட்டி தினசரி நாளிதழ் அல்-அன்பா இதை வெளியிட்டுள்ளது.

குடும்பத் தலைவர் நாட்டிற்கு வெளியே இருந்தால் , அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குவைத்துக்குள் இருந்தால் , அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப தற்காலிக குடியிருப்பு வழங்கப்படும் என்றும் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது

பின்வரும் விசா பிரிவுகளில் உள்ளவர்கள் 14,17,18, 22, 24 இந்த சேவையைப் பயன்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.