குவைத்தில் ஊரடங்கு உத்தரவின்போது வெளியே சென்ற வெளிநாட்டினர் கைது..!!

Expat arrested for breaking curfew in kuwait.

வெளிநாட்டைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபரை சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக அல்-ராய் தினசரி தெரிவித்துள்ளது.

அந்த சந்தேக நபர் ஊரடங்கு நேரத்தில் விடியற்காலையில் சல்மியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையில் நடந்து செல்வதைக் காவல்துறையினர் கண்டுள்ளனர்.

மேலும், தப்பிக்க முயன்ற அந்த நபர் காவல்துறையிடம் பிடிப்பட்டார், விசாரித்தபோது அந்த நபரிடம் எந்த ஒரு அடையாள ஆவணங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின்போது அவர் ஏன் வீட்டை விட்டு வெளியே வந்தார் என்பதை அறிய சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அவர் அனுப்பப்பட்டுள்ளார்.