கொரோனா வைரஸ்; குவைத்தில் ஷாப்பிங் மால்கள் மற்றும் குழந்தைகளின் பொழுதுபோக்கு மையங்கள் மூடல்..!!

Expatriates wait for mandatory coronavirus testing in a makeshift testing centre in Mishref, Kuwait, on March 14. (photo : Gulf News)

குவைத் சனிக்கிழமையன்று உணவு பொருட்கள் தொடர்பான அனைத்து வணிக வளாகங்களையும் மூட முடிவு செய்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து குழந்தைகளின் பொழுதுபோக்கு மையங்களும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சலூன் நிலையங்களும் மூடப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸின் காரணத்தால் குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் அனைத்து சர்வதேச விமானங்களையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

source : Gulf News