குவைத்திலிருந்து இந்தியர்களுடன் கொச்சி மற்றும் ஹைதராபாத்திற்கு விமானங்கள் புறப்பட்டன; இன்று சென்னைக்கு விமானம் புறப்படும்..!!

Evacuvation starts as per plan vande Bharat in kuwait.

குவைத்தின் இந்திய தூதுவர் ஜீவாசாஹர் அவர்கள் விமான நிலையத்தில் வந்து புறப்படும் இந்தியர்களை வழியனுப்பி வைத்தார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கொச்சி விமானத்தில் 177 இந்தியர்களும் மற்றும் ஹைதராபாத் விமானத்தில் 160 இந்தியர்களும் புறப்பட்டு சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று (மே 10) சென்னைக்கு சிறப்பு விமானம் புறப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்காக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்திற்கு அனுமதி கிடைத்துள்ள இந்தியர்களுக்கு குவைத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகங்கள் வழியாக பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக குவைத் ரூபாய் மதிப்பில் 80 தினார்கள் என்று நிர்ணயம் செய்யபட்டுள்ள கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.