குவைத்தில் பொதுமன்னிப்பு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..!!

Egyptian deportees create riots in accommodating shelters. (photo : Arab Times)

குவைத் அரசால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு கடந்த ஒரு மாதமாக குவைத்தில் நடைமுறையில் இருந்து நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் சிறிய அளவிலான சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த மக்கள் விகிதம் உள்ள சில நாடுகள் தங்கள் மக்களை நாட்டிற்கு அழைத்து சென்றனர். மேலும், குவைத்தில் பல இடங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை குவைத் அரசு பொதுமன்னிப்பு காப்பகங்களில் தங்கவைத்து அந்த நாடுகளின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில், தாயகம் திரும்புவதற்கு ஆவணங்கள் சரிசெய்து குவைத்தின் Kabd பகுதியில் பொதுமன்னிப்பு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டினார்கள் திடிரென இன்று (மே,4) அதிகாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. மேலும், தங்கள் நாட்டின் வெளியுறவுத்துறை அனுமதி அளிக்காத காரணத்தால் தான் நீங்கள் தாயகம் திரும்புவதற்கு முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும், மற்றப்படி குவைத் அரசு தரப்பில் எந்த தவறும் இல்லை என்றும் எவ்வளவு எடுத்துரைத்தும் அவர்கள் கலைந்து செல்லாமல் ஆக்ரோஷமாக போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் அவர்கள் மீது தண்ணீர் புகை குண்டு வீசி அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.

இந்த போராட்டத்தில் 40 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் எகிப்து நாட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.