குவைத்தில் தூசியுடன் கூடிய புயலுக்கு வாய்ப்பு..!!

Dust storm to blow in kuwait soon.

குவைத்தில் வருகின்ற சில நாட்களில் தூசியுடன் கூடிய புயல் வீசும் வாய்ப்புள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகதின் (DGCA) வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் கணித்துள்ளது.

வடமேற்கு காற்று மணிக்கு 45 கிமீ வேகத்தில் வீசும் குறிப்பாக திறந்தவெளிகளில் தூசியைத் தூண்டும் மற்றும் 1 கி.மீ.க்கு குறைவாக தெரிவுநிலையைக் கொண்டுவரும் என்று வானிலை ஆய்வு நிலையங்களின் மேற்பார்வையாளர் தரார் அல்-அலி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், காற்றின் வேகம் மணிக்கு 15-38 கிமீ வரை குறையும் போது வானிலை படிப்படியாக மேம்படும் என்று தெரிவித்தார். அல்-அலி அவர்கள் மாலுமிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வரும் நாட்களில் அதிக அலைகள் மற்றும் மோசமான தெரிவுநிலையின் காரணத்தால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

source :  Arab Times