குவைத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளங்கள் டெபாசிட் செய்யும் பணிகள் தீவிரம்..!!

Depositing of salaries in banks for the month of april.

அரசாங்க ஊழியர்களுக்கான ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் மற்றும் நிதி நிலுவைத் தொகையைப் பயனாளிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்ய உள்ளூர் வங்கிகள் நேற்று (17.04.2020) தொடங்கியதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரமலான் மாதத்திற்கு முன்னர் அனைத்து சம்பளங்களும் டெபாசிட் செய்யப்படும் என்று அரசு நிறுவனங்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்ற பின்னர் வங்கிகள் சம்பளத்தை டெபாசிட் செய்ய முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், நேற்று காலை வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஊதியத்தை வங்கிகள் டெபாசிட் செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.