குவைத்தில் காணவில்லை என்று தேடப்பட்டு வந்த தமிழர் ஒருவரின் உடல் தற்போது Zahra பகுதியில் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு..!!

Decomposed Body Found In A Parked Car In Zahra. (photo : KuwaitLocal)

குவைத்தின் Zahra பகுதியில் உள்ள மசூதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் நேற்று (29/06/20) சிதைந்த நிலையில் ஒரு உடல் இருப்பதை பார்த்த ஒருவர் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டு அறைக்கு (அவசரகால உதவி பிரிவுக்கு) அழைப்பு மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக இந்த இடம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கில் இருந்தது, இதையடுத்து கடந்த சில நாட்களாக இந்த இடம் பொதுமக்கள் பயன்படுத்த மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சிதைந்து துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பிவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்ட விசாரணையில் காணவில்லை என்று கடந்த இரண்டு மாதங்களாக தேடப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுநராக வேலை செய்துவந்த நபரின் உடல் இது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 26/04/2020 அன்றிலிருந்து இவரை காணவில்லை என்றும், இவருக்கு பிறந்து 17 நாள் ஆன பெண் குழந்தை உள்ளது எனவும், மனைவி மற்றும் குடுப்பதார்களிடம் அவரைப்பற்றி தகவல் தரும்படி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விரலாக பரவியிருந்தது.

இறந்தவர் சக்திவேல் (37) கும்பகோணம் அருகில் திருப்பந்துறையை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

Sakthivel (37) (image credit : KTP news)

மேலும், குவைத்தில் உள்ள பிரபல ஓட்டுநர் உதவி அமைப்பு என்று தங்களை கூறிக்கொள்ளும் அமைப்பிடம் குவைத்தில் உள்ள சக்திவேல் குறித்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உதவியை கேட்டுள்ளனர், ஆனால் அவரைப்பற்றி எந்தவொரு முறையான விசாரணையும் செய்யாமல் வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் உள்ளார் என்று பொய்யாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆறுதல் அடைந்திருந்த நிலையில், தீடீரன்று இந்த செய்தி அந்த குடும்பத்திற்கு நேற்று மாலையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08