குவைத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்..!!

Decision on total ban laid on cabinet of ministers table in Kuwait. (photo : Gulfnews)

குவைத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் என்று அரசாங்கத்தின் மூத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் இன்னும் முறையாக முடிவு செய்யப்படவில்லை, ஆனால் வருகின்ற சனிக்கிழமையன்று (மே 9) அது செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் அதற்கான பாதுகாப்பு முழுமையாக தயாராக உள்ளது என்று அந்த வட்டாரம் வெளிப்படுத்தியது.

மேலும், முழு ஊரடங்கு அமல்படுத்தினால் கொரோனா வைரஸ் பரவுவதைக் குறைக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.